சேதமடைந்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் கல்லறை...சீரமைத்த இந்திய ராணுவம்...சமூகவலைதளங்களில் குவியும் பாராட்டுக்கள்
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவரின் சேதமடைந்த கல்லறையை இந்திய ராணுவம் சீரமைத்துள்ளது சமூகவலைதளங்களில் பாராட்டை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மேஜர் மொஹமட் ஷபீர் கான், 1972 ஆம் ஆண்டு சீக்கியர்களுடனான சண்டையில் கொல்லப்பட்ட நிலையில், நவுகாமில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
அவரின் கல்லறை காலப்போக்கில் சேதமடைந்த நிலையில், இந்திய ராணுவத்தின் மரபுகள் மற்றும் நெறிமுறைகளுக்கு இணங்க, மொஹமட் ஷபீர் கானின் கல்லறை சீரமைக்கப்பட்டதாக இந்திய ராணுவம் புகைப்படத்துடன் டுவிட் செய்துள்ளது.
#SouthernCommand #ProfessionalForce
— Southern Command INDIAN ARMY (@IaSouthern) October 16, 2020
In keeping with the traditions & ethos of the #IndianArmy, #ChinarCorps resuscitated a damaged grave of Major Mohd Shabir Khan, Sitara-e-Jurrat, #Pakistan Army,who was Killed in Action (KIA) at a forward location along LC in Naugam Sector. https://t.co/aLJHdt01bQ
Comments