மத்திய பிரதேசத்தில் 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டையில் பாலிவுட் நடிகைகளின் புகைப்படங்கள்

0 1860
மத்திய பிரதேசத்தில் 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டையில் பாலிவுட் நடிகைகளின் புகைப்படங்கள்

மத்திய பிரதேசத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நடிகை தீபிகா படுகோனே புகைப்படம் கொண்ட போலி அடையாள அட்டைகளை உருவாக்கி சிலர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

ஜிர்னியா மாவட்டத்தில் உள்ள பிபர்கேடா நாகா கிராமத்தில் நடிகைகள் தீபிகா படுகோனே, ஜாகுலின் பெர்ணாண்டஸ் ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய வேலை அட்டைகளை உருவாக்கி அதிகாரிகள் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

100 நாள் வேலை திட்டத்தில் கிராம மக்களுக்கு வேலை வழங்காமலேயே அவர்களது பெயரில் போலி அட்டைகளை உருவாக்கி, அவர்களது வங்கிக்கணக்கில் மத்திய அரசால் செலுத்தப்படும் சம்பளத்தொகையை அதிகாரிகள் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments