தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு முறையில் பொருட்களை வழங்க அறிவுறுத்தல்

0 2648
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு முறையில் பொருட்களை வழங்க அறிவுறுத்தல்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நியாய விலை கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் பொருட்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், பழைய ஸ்மார்ட் கார்டு முறைப்படி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 1-ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் பயோமெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தொடர்ந்து பயோ மெட்ரிக் முறையில் ரேசன் பொருட்களை பெறுவதில் சிரமங்கள் ஏற்பட்டது.

இதையடுத்து, தற்காலிகமாக 1-ம் தேதிக்கு முன்பு கடைப்பிடிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு முறையில் பொருட்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments