குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை இறக்குமதி செய்ய தடை: உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை
குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஏர் கண்டிஷனர்கள் மற்றும் அவற்றில் பயன்படுத்தப்படும் கம்ப்ரஸர்களில் 90 சதவீதம் சீனா மற்றும் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை இறக்குமதி செய்ய தடை விதித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
இதன்பொருட்டு இறக்குமதி கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Government of India has banned the import of air conditioners with refrigerants. pic.twitter.com/J4pp4Y282I
— ANI (@ANI) October 16, 2020
Comments