அக்டோபர் மாதத்தில் பருவமழை முடிவுக்கு வர வாய்ப்பில்லை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
அக்டோபர் மாதத்தில் பருமழை முடிவுக்கு வர வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில், கிழக்கு மத்திய அரபிக் கடலில் 19ம் தேதிக்குள் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்பிருப்பதாகவும், இதனால் இந்தியாவின் கிழக்கு பகுதியில் அதிக மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.
இதேபோல் தென் மேற்கு பருவ காற்று வலுவாக வீசுவதால், இம்மாதம் 29ம் தேதி வரையிலும் பருவமழை முடிவுக்கு வர வாய்ப்பில்லை எனவும், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அந்த வாரம் முழுமைக்கும் மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
Comments