இந்தியாவின் சன்னா மசாலா, நாண் தனக்கு மிக பிடித்த உணவு - தைவான் அதிபர்

0 3535
இந்தியாவின் சன்னா மசாலா, நாண் தனக்கு மிக பிடித்த உணவு - தைவான் அதிபர்

இந்திய உணவுகளான சன்னா மசாலா மற்றும் நாண் தனது விருப்பமான உணவு என தெரிவித்துள்ள தைவான் அதிபர் சாய் இங்-வென், தனது இந்திய சுற்றுப் பயணத்தின் மகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

சாதம், சன்னா மசாலா, நாண், சாலட் உள்ளிட்ட இந்திய உணவுகள் அடங்கிய தட்டுடன் ஒரு கப் தேநீர் உள்ள புகைப்படத்தை ட்வீட் செய்துள்ள அதிபர் சாய் இங்-வென்,  தைவானில் பல இந்திய உணவகங்கள் உள்ளது தங்களின் அதிர்ஷ்டம் என்றும் மக்கள் அவற்றை அதிகம் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது  இந்திய சுற்றுப் பயணத்தை தேநீர் நினைவூட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments