புலம்பெயர் தொழிலாளர் நலனுக்கென உருவாக்கப்படும் இணையதளம்...அடுத்த சில ஆண்டுகளில் 25 கோடி பேரை சேர்க்க மத்திய அரசு திட்டம்
புலம்பெயர் தொழிலாளர் நலனுக்கென உருவாக்கப்படும் பிரத்யேக இணையதளம் வாயிலாக 25 கோடி பேரை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மானிய விலை ரேசன் திட்டமான கரிப் கல்யாண் அன்னா யோஜனா, மருத்துவ காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இந்த திட்டம் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிலாளர்கள் தங்கள் மொபைல் போன்களில் இருந்தே பதிவு செய்துகொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த தகவல்கள் முறைப்படுத்தப்படுவதுடன், அவர்களுக்கான நலத்திட்டங்கள் ஒற்றை சாளர முறையில் எளிதாக சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னலுக்கு ஆளானதையடுத்து இந்த திட்டம் முன்மொழியப்பட்டது.
புலம்பெயர் தொழிலாளர் நலனுக்கென உருவாக்கப்படும் இணையதளம்...அடுத்த சில ஆண்டுகளில் 25 கோடி பேரை சேர்க்க மத்திய அரசு திட்டம் #MigrantWorkers | #CentralGovernment | #AyushmanBharat https://t.co/hDSgWLmcCl
— Polimer News (@polimernews) October 16, 2020
Comments