தேசிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்கும் கால அவகாசம் அக்.31-ம் தேதி வரை நீட்டிப்பு
தேசிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்கும் கால அவகாசத்தை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்து பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கல்வி கொள்கை மீது கருத்து தெரிவிக்க அக்டோபர் 18-ம் தேதி வரை வழங்கப்பட்ட கால அவகாசம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இணையதளம் வாயிலாக கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும், கால அவகாசம் நீட்டிப்பு மற்றும் கருத்து தெரிவிப்பதன் அவசியத்தை விளம்பரப்படுத்துமாறு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு UGC அறிவுறுத்தியுள்ளது.
Discussion on outline of the NEP 2020 implementation plan is live on @mygovindia Portal at https://t.co/GFzys3od1d. Feedback & suggestions invited from stakeholders in Higher Educational Institutions by 31st October,2020.@EduMinOfIndia @DrRPNishank @SanjayDhotreMP pic.twitter.com/imLxHBerru
— UGC INDIA (@ugc_india) October 15, 2020
Comments