ரெம்டெசிவிர், ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் பயனில்லை - உலக சுகாதார நிறுவனம்
கொரோனாவுக்காக முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட ரெம்டெசிவிர் மருந்தால் பெரிய பலன் இல்லை என்றும் அந்த மருந்து கொரோனா உயிரிழப்பை தடுக்கவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கிலியட் சயின்ஸ் நிறுவனத்தின் ரெம்டெசிவிர், ஹைட்ராக்ஸி குளோரோகுயின், எச்.ஐ.வி. எதிர்ப்பு மருந்துகளான லோபினாவிர்-ரிடோனாவிர், இன்டர்ஃபெரான் ஆகியவற்றை 30க்கும் மேற்பட்ட நாடுகளில் 11 ஆயிரத்து 266 கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தி உலக சுகாதார நிறுவனம் ஆய்வு நடத்தியது.
அதில், ரெம்டெசிவிர், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் நோயாளிகளிடம் எந்த சாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
Comments