பிரதமர் கிசான் திட்ட முறைகேடு வழக்கில் 101 பேர் இதுவரை கைது : சிபிசிஐடி

0 1698

பிரதமர் கிசான் திட்ட முறைகேடு வழக்கில் 101 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு, 105 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

3 ஹெக்டர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு  விவசாயிளுக்கு தலா 2ஆயிரம் ரூபாய் வீதம் வருடத்திற்கு 6ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு  முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் தமிழகத்தில் விவசாயிகள் அல்லாத பலர் போலி அடையாள அட்டைகளை கொண்டு  இணைந்துள்ளதாகவும்,  போலியாக சுமார் 6 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு, கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

இதுகுறித்து  விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி அதிகாரிகள், இதுவரை அரசு துறை சார்ந்த ஊழியர்கள் 100 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments