விண்வெளியில் சீன ராக்கெட்டும், ரஷிய செயற்கைகோளும் நாளை நேருக்கு நேர் மோதக்கூடும் என தகவல்
விண்வெளியில் செயலிழந்து குப்பைகளாக உள்ள சீன ராக்கெட்டும், ரஷிய செயற்கைகோளும் நாளை நேருக்கு நேர் மோதக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.
பூமியின் கீழ்மட்ட சுற்றுவட்டப் பாதையில் 991 கிலோமீட்டர் உயரத்தில் இந்த விண்மோதல் நிகழலாம் என, அமெரிக்க ஆய்வகமான லியோ லேப்ஸ் நிறுவனம் கூறி உள்ளது.
இதற்கான வாய்ப்புகள் 10 சதவீதம் தான் என்றாலும், இந்த மோதல் நிகழ்ந்தால் அது பயங்கரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
1989ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்ட, ரஷிய செயற்கை கோள் செயலிழந்து குப்பையாக விண்ணில் சுற்றுகிறது.
Comments