கோவை : நாய்க்கு விஷம் வைத்து கொன்று , சந்தன மரங்களை வெட்டி கடத்திய கும்பல்

0 14014

கோவையை அடுத்த பேரூர் தீத்திபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி குருநாதன் என்பவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த 15 வருடங்களாக  இரண்டு சந்தன மரங்களை வளர்ந்து வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை தோட்டத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர், பாதுகாப்புங்ககு வளர்க்கப்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றுவிட்டு, சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்று விட்டனர்.  

இது குறித்து, மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளிக்கபட்டதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வு மேற்கொண்டனர். வெட்டபட்ட சந்தன மரத்தின் மதிப்பு ரூ.3 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.  வனத்துறையினரின் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்துள்ள பேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ள போலீஸார் அவரிடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாய்களுக்கு விஷம் வைத்து கொன்று விட்டு சந்தன மரங்களை  வெட்டி திருடி சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments