'ராயல் என்ஃபீல்டு மட்டும்தான் இலக்கு' - சென்னையை அலற வைத்த கும்பல் சிக்கியது

0 3501

சென்னையில், தொடர்ந்து என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்களை  குறி வைத்து திருடி வந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடந்து வரும் என்ஃபீல்டு இருசக்கர வாகன திருட்டு தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் போலீஸார் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வந்தனர். கடந்த அக்டோபர் 4- ஆம் தேதி புல்லட் திருடும் கும்பலை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான சஃபி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள், திருடிய இரு சக்கர வாகனங்களை விற்க தனி வாட்சப் குழு நடத்தியது தெரிய வந்தது. வாட்ஸ்அப் குழுவில் வாடிக்கையாளர்கள் கேட்கும் விதத்தில் மோட்டார் சைக்கிளை தேடிக் கண்டுபிடித்து இந்த கும்பல் திருடியுள்ளது. கிட்டத்தட்ட 68 என்ஃபீல்டு ரக மோட்டார் சைக்கிள்களை இவர்கள் திருடியது விசாரணையில் தெரியவந்தது.

இந்த கும்பலின் வாட்ஸ்அப் குழுவில் உள்ள எண்களை போலீசார் ஆய்வு செய்தபோது, அனைத்து எண்களும் போலி சான்றிதழ் மற்றும் முகவரி கொடுக்கப்பட்டு பெறப்பட்ட சிம்கார்டுகள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. வாட்ஸ்அப் குழுவில் உள்ள ஒவ்வொரு எண்ணையும் சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து தகவல்களை சேகரித்தனர். போலி முகவரி பெயரில் பல எண்கள் வாங்கப்பட்ட தால்,அந்த எண்கள் செயல்படும் போது கிடைக்கும் சிக்னல்களை கொண்டு, இருப்பிடங்களை கண்டறிந்து ஜமால், சையது இப்ராஹிம், அமீர், கதிரவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இதனிடையே, தஞ்சாவூரில் செயின் பறிப்பு விவகாரத்தில் அப்துல்லா என்பவன் கைது செய்யப்பட்டான். அப்துல்லா செயின் பறிப்பு க்காக பயன்படுத்தப்பட்ட என்பீல்டு மோட்டார் சைக்கிள் திருட்டு வாகனம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தஞ்சாவூர் போலீசார் விசாரணை செய்ததில் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களை திருடும் கும்பலில், அப்துல்லாவும் ஒருவன் என்பது தெரிய வந்தது. 

இந்த கும்பல் திருடிய பைக்குகளை கேரளா மாநிலம் திருவனந்தபுரம், நெடுமாங்காடு, பளிச்சல் மற்றும் தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, தேனி, பகுதிகளில் விற்றுள்ளது. கடந்த இரண்டு வருடத்தில் சென்னையில் மட்டும் 68 என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்களை இவர்கள் திருடியுள்ளனர்.  இந்த கும்பலிடத்திலிருந்து  ரூ .51 லட்சம் மதிப்புள்ள 26 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments