உத்தரப்பிரதேச இளம் பெண் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு இளைஞர்களின் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

0 1553
உத்தரப்பிரதேச இளம் பெண் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு இளைஞர்களின் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் இதன் தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டு அலிகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 இளைஞர்களின் குடும்பத்தினரிடமும் நேற்று விசாரணை நடத்தினர்.

சந்தீப், ரவி, ராமு, லவ்குஸ் ஆகிய நான்கு பேரும் 19 வயது தலித் இளம் பெண்ணை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தாங்கள் கொலை செய்யவில்லை என்று நால்வரும் மறுத்துள்ளனர்.

முன்னதாக காவல்நிலையத்துக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் குழு வழக்குத் தொடர்பான ஆவணங்களைப் பெற்றுக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments