டென்மார்க் பூங்காவில் வசித்து வரும் உலகின் அதிக வயதான பென்குயின்
டென்மார்க் நாட்டில் உள்ள Odense பூங்காவில் வசிக்கும் 41வயதான பென்குயின் உலகின் அதிக வயதான பெங்குவின் என்ற சாதனையை படைத்துள்ளது.
Olde என்ற பெயர் கொண்ட அந்த பென்குயின் கடந்த 4ந் தேதி அன்று 41 வருடங்கள் மற்றும் 141 நாட்களை கடந்ததாக கின்னஸ் அமைப்பினர் தெரிவித்தனர்.
gentoo இனத்தை சேர்ந்த பென்குயின்கள் பொதுவாக 15 முதல் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
ஆனால் இந்த பென்குயின் அதையும் கடந்த 41ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருவது மகிழ்ச்சியை அளிப்பதாக பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Comments