மழை வெள்ளத்தால் தெலங்கானாவில் 5000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு... நிவாரண நிதி வழங்க கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கடிதம்
தெலுங்கானாவில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
மழை காரணமாக சுமார் 5000 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்படுகிறது. பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆயிரத்து 350 கோடி ரூபாய் உடனடி நிவாரணமாக வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மழை தணிந்து மெல்ல ஹைதராபாத் நகரம் நேற்று இயல்புக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. மழையால் தெருக்கள் கடுமையான முறையில் சேதம் அடைந்துள்ளன. 14 வீடுகள் முழுதாக இடிந்தும் பயிர்கள் சேதம் அடைந்தும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பல வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்து விட்டதால் மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறுகின்றன. மழை காரணமாக நோய்கள் பரவாமல் தடுக்கவும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Comments