கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி
கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மிகக் குறைந்த செலவில் மிகவும் விரைவாக சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த மோடி அதற்கான சாத்தியம் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு மருந்து ஆய்வுகள் நிறைவுக் கட்டத்தை எட்டி வரும் நிலையில் அது தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது பரிசோதனைகளை அதிகப்படுத்துவதுடன் மரபு சார்ந்த சித்தா, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளை பயன்படுத்துவது குறித்து பிரதமர் மோடி அடிக்கோடிட்டு காட்டியுள்ளார்.
PM Modi took review meeting of research & vaccine deployment ecosystem against COVID19 including testing technologies, contact tracing, drugs & therapeutics. It was attended by Health Minister, Member (Health), NITI Aayog; Principal Scientific Advisor; scientists & officials: PMO pic.twitter.com/8kaEXOLX1q
— ANI (@ANI) October 15, 2020
Comments