ஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில், பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை சேர்த்தது.
அதிகபட்சமாக கேப்டன் கோலி 49 ரன்களை சேர்த்தார்.
இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியில், அதிரடியாக ஆடிய கே.எல். ராகுல் 61 ரன்களையும், கெயில் 53 ரன்களையும், மயங்க அகர்வால் 45 ரன்களையும் சேர்த்தனர்.
இதன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்களை சேர்த்து, தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்தது.
Comments