வளரும் நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை வாங்கி விநியோகிப்பதற்கு கடனுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல்
வளரும் நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை வாங்கி விநியோகிப்பதற்காக 87,900கோடி ரூபாய் கடனுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து அவ்வங்கி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வளரும் நாடுகளில் 100 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கச் செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக, அந்த நாடுகள் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கும் பொதுமக்களிடையே விநியோகிப்பதற்கும் 1,200 கோடி டாலர் கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
.@WorldBank has been at the forefront of the global response to #COVID19 & expects to deploy up to $160B over 15 months through June 2021. Download our Annual Report to learn how we’re mitigating its impacts & boosting long-term growth. https://t.co/ANUOaOkA3v #ResilientRecovery pic.twitter.com/jVEdiUzZWz
— World Bank (@WorldBank) October 16, 2020
Comments