ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரிய இடஒதுக்கீடு கொடுக்க வேண்டாமா?நாம் கொடுக்காவிட்டால் யார் கொடுப்பார்கள்?: உயர்நீதிமன்ற கிளை கேள்வி

0 2128

மருத்துவ மாணவ சேர்க்கையில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரிய இட ஒதுக்கீடு இல்லை என்றால், அனைத்து வகை இட ஒதுக்கீடும் தேவை இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள், கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாட்டில் நாம் நிம்மதியாக இருப்பதற்கு, ராணுவ வீரர்கள் தான் காரணம் என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். 

ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு நாம் இடஒதுக்கீடு வழங்கவில்லை எனில் யார் கொடுப்பார்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் உரிய முடிவினை தெரிவிக்க, தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments