பயிர்கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் 4 சதவிகிதம் காற்று மாசு-அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
டெல்லியில் காற்று மாசுவின் அளவில் 4 சதவீதமே, பஞ்சாப்பில் பயிர் கழிவுகளை எரிப்பதால் ஏற்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி மற்றும் தலைநகர் மண்டலத்தில் காற்று மாசு குறித்து ஆய்வு செய்ய, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை சேர்ந்த 50 பேரை களமிறக்க இருப்பதாக கூறினார்.
இதனிடையே டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த போக்குவரத்து சிக்னல்களில், வாகனங்களின் இயக்கத்தை நிறுத்தும் பிரச்சாரத்தை தொடங்கி இருப்பதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Comments