ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 2.38 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு-மத்திய அரசு
ஜல் ஜீவன் திட்டத்தில் நாடு முழுவதும் 2.38 கோடி குடும்பங்கள் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அந்த திட்டத்தை செயல்படுத்தும் ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற குடும்பங்களுக்கும் குழாய் குடிநீரை கொண்டு சேர்ப்பது இந்த திட்டத்தின் நோக்கமென கூறப்பட்டுள்ளது.
தற்போது புதிதாக 2 கோடியே 38 லட்சத்து 21 ஆயிரத்து 386 குடும்பங்கள் குழாய் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதாகவும், அதிகபட்சமாக கோவாவில் 100 சதவீத கிராமப்புற குடும்பங்களுக்கும் குழாய் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Comments