சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை முதல் 5 நாட்களுக்கு நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை நடை திறக்கப்படுகிறது.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுமென கூறப்பட்டுள்ளது.
மறுநாளான 17 - ந் தேதி முதல் 21 -ந் தேதி வரை தினமும் பூஜைகள் நடைபெறும் என்றும், ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களில் தினமும் 250 பேர் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக பெறப்பட்ட கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்றும், பம்பையில் பக்தர்கள் குளிக்க கூடாது என்றும், பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments