தமிழக தொழிற்சாலை பாதுகாப்பு, சுகாதார துறை இயக்குனர் நியமன விவகாரம் - சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
தமிழக தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையின் கூடுதல் இயக்குனரான எம்.பி.செந்தில்குமாரை, இயக்குனராக நியமித்த அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கூடுதல் இயக்குனராக உள்ள ராஜசேகர் தொடர்ந்த வழக்கில், இயக்குனர் பதவிக்கான பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்ட போது, 23 வது இடத்தில் தனது பெயர் இடம் பெற்றிருந்ததாகவும், 29வது இடத்தில் இருந்த தன்னை விட ஜூனியரான ராஜசேகரனை இயக்குனராக நியமித்தது சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், கூடுதல் இயக்குனர் செந்தில்குமாரை இயக்குனராக நியமித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனுவுக்கு 4 வாரத்தில் தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை, தமிழக தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை, இயக்குனராக நியமிக்கப்பட்ட செந்தில்குமார் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
Comments