தலைமைச் செயலகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி; ஊழியர்கள், அதிகாரிகளை தீவிரமாக கண்காணிக்க அதிரடி உத்தரவு

0 1131
தலைமைச் செயலகத்தில், கொரோனா பாதிப்பு எதிரொலியாக, பணியாளர்களுக்கு பரிசோதனை செய்து கண்காணிக்குமாறு, அனைத்துத்துறை செயலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில், கொரோனா பாதிப்பு எதிரொலியாக, பணியாளர்களுக்கு பரிசோதனை செய்து கண்காணிக்குமாறு, அனைத்துத்துறை செயலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த மூன்று வாரத்தில் மட்டும் 256 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக, பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் அனைத்து துறை செயலாளர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், ஏற்கனவே உள்ள உடல் வெப்ப பரிசோதனை, சானிடைசர் கொண்டு தூய்மைப்படுத்துதல் உள்ளிட்டவற்றோடு, பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம், ஊழியர்கள், அதிகாரிகளின் ஆக்சிஜன் அளவையும் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லேசான அறிகுறிகள் இருந்தாலோ அல்லது, உடல் வெப்பநிலை மாறுபாடு இருந்தாலோ, உடனடியாக கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments