வாகனங்களுக்கான தகுதி சான்றை புதுப்பிக்கும் புதிய விதிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

0 3357
வாகனங்களுக்கான தகுதி சான்றை புதுப்பிக்கும் போது பிரதிபலிப்பு ஸ்டிக்கர், ப்ரேக், ஒளி விளக்கு உள்ளிட்ட உதிரி பாகங்களை குறிப்பிட்ட நிறுவனத்திடம் வாங்கி, சான்று பெறவேண்டும் என்ற புதிய விதிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக போக்குவரத்து துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், போக்குவரத்து ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தவிட்டார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக போக்குவரத்து ஆணையர், 3M இண்டியா, மற்றும் சிப்பி ரிடைல் டிரேடிங் ஆகிய நிறுவனங்கள் நவம்பர் 26 ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments