கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 12,389 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு

0 1173
கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 12,389 கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 11,589 கன அடி வீதமும், கபினி அணையில் இருந்து 800 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை அளவு குறைந்துள்ளதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 15ஆயிரம் கன அடி வீதமாக குறைந்துள்ளது.

இதனிடையே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,741 கன அடியில் இருந்து 14,947கன அடி வீதமாக குறைந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக 14ஆயிரம் கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 900 கன அடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடியாகவே தொடர்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments