அபராதத்துடன் ரூ.6.50 லட்சம் சொத்துவரியை செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்
சென்னை ராகவேந்திரா மண்டப சொத்து வரி விவகாரத்தில் தவறைத் தவிர்த்திருக்கலாம் என்று டுவிட் செய்திருந்த நடிகர் ரஜினிகாந்த், அபராதத்துடன் ஆறரை லட்சம் ரூபாய் சொத்துவரியை செலுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி செலுத்தும்படி சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்ததையடுத்து வழக்கை ரஜினிகாந்த் வாபஸ் பெற்றார். இது தொடர்பாக ட்வீட் செய்திருந்த ரஜினிகாந்த், மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும் என்றும் அனுபவமே பாடம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், உரிய நேரத்தில் வரி செலுத்தாதற்கான 9 ஆயிரத்து 300 ரூபாய் அபராதத்துடன் நடிகர் ரஜினிகாந்த் சொத்து வரியை காசோலை மூலம் செலுத்தி உள்ளார்.
Comments