நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 லட்சத்தை கடந்தது...
நாடு முழுவதும் ஒரே நாளில் 67 ஆயிரத்து 708 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 லட்சத்தை கடந்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 680 பேர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கையும் ஒரு லட்சத்து 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா தொற்று பாதித்த 8 லட்சத்து 12 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63 லட்சத்து 83ஆயிரமாக உள்ளது. இதுவரை 9 கோடியே 12 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
Active COVID-19 cases in country stand at 8,12,390 while 63,83,441 people have recovered so far:Union Health Ministry
— Press Trust of India (@PTI_News) October 15, 2020
Comments