சொத்து வரி விவகாரம்: தவறைத் தவிர்த்திருக்கலாம், அனுபவமே பாடம் - ரஜினிகாந்த்
சென்னை ராகவேந்திரா மண்டப சொத்து வரி விவகாரத்தில் தவறைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அனுபவமே பாடம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ஆறரை லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்தும்படி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு விசாரணையின் போது, நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதற்கு அபராதம் விதிக்கப் போவதாக நீதிபதி எச்சரித்ததையடுத்து, வழக்கை ரஜினிகாந்த் வாபஸ் பெற்றார்.
இந்த நிலையில், இது தொடர்பாக பதிவிட்டுள்ள ட்விட்டில், தான் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும் என்றும் அனுபவமே பாடம் என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
ராகவேந்திரா மண்டப சொத்து வரி...
— Rajinikanth (@rajinikanth) October 15, 2020
நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.
தவறைத் தவிர்த்திருக்கலாம்.#அனுபவமே_பாடம்
Comments