டிரம்பின் மகன் பாரனுக்கு கொரோனா தொற்று உறுதி- டிரம்பின் மனைவி மெலானியா தகவல்

0 1450
டிரம்பின் மகன் பாரனுக்கு கொரோனா தொற்று உறுதி- டிரம்பின் மனைவி மெலானியா தகவல்

அமெரிக்க அதிபர் டிரம்பின் 14 வயதான மகன் பாரனுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக டிரம்பின் மனைவி மெலானியா தெரிவித்துள்ளார்.

தமக்கும், டிரம்பிற்கும் ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டதால், மகனுக்கும் அது வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஆனால் மகனுக்கு அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

Des Moines ல் நடந்த பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் இதை உறுதிப்படுத்திய அதிபர் டிரம்ப், சிறுவர்களின் நோய் எதிர்ப்புத் திறன் உறுதியானது என்பதால் தமது மகனுக்கு எந்த அறிகுறியும் காணப்படவில்லை என்றார். இதனால் தான் பள்ளிகளை திறக்க வேண்டும் என தாம் கூறிவருவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments