“சைக்கோ” கணவனின் கொடுமைகள் நீதிக்காக காத்திருக்கும் பெண்

0 155669
“சைக்கோ” கணவனின் கொடுமைகள் நீதிக்காக காத்திருக்கும் பெண்

லண்டனை சேர்ந்த பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த சென்னையைச் சேர்ந்த எச்.சி.எல் நிறுவன அதிகாரி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கணவரை பிரிந்து மகளுடன் லண்டனில் வசித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு ராஜ்குமார் அய்யாசாமி என்ற நபர் அறிமுகமாகி இருக்கிறார். சென்னை அம்பத்தூர் எச்.சி.எல் நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் உள்ள ராஜ்குமார் அய்யாசாமி அப்போது லண்டனில் உள்ள அந்நிறுவன கிளையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

நண்பர்கள் மூலம் அறிமுகமான அந்தப் பெண்ணுடன் வாட்சப் சேட்டிங் செய்து வந்த ராஜ்குமார் அய்யாசாமி, தனது மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாகவும் அதனால் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். 2 ஆண்டுகள் இ-மெயில் மூலமும், வாட்ஸ் அப் மூலமும் ராஜ்குமார் பொழிந்த காதல் வசனங்களை நம்பி அந்த பெண்ணும் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார்.

சென்னைக்கு பணிமாற்றமான ராஜ்குமார் தனக்கு விவகாரத்து ஆகிவிட்டதாக கூறி, 2014 லண்டன் பெண்ணை சென்னை வரவழைத்து அடையாறில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். முறையாக பதிவு செய்யப்படாத அந்தத் திருமணத்துக்குப் பின் சைக்கோ போல மாறிய ராஜ்குமார் அய்யாசாமி லண்டன் பெண்ணுக்கு தினசரி பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, முதல் திருமணத்தை விவாகரத்து செய்யாமல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்துவதாக ராஜ்குமார் மீது அடையாறு காவல் நிலையத்தில் லண்டன் பெண் கடந்த 2016ஆம் ஆண்டு புகாரளித்துள்ளார். அப்போது நம்பிக்கை மோசடி என்ற பிரிவில் மட்டும் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை அய்யாசாமியை கைது செய்ய, சில நாட்களில் அந்த நபர் பிணையில் வெளியில் வந்துவிட்டார்.

இதனையடுத்து நீதிமன்றத்தை நாடிய லண்டன் பெண், திருமணத்துக்கு முன் ராஜ்குமார் அய்யாசாமி தனக்கு போதை மருந்து கொடுத்து ஆபாசமாக எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை சமர்ப்பித்து, அவற்றின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என முறையிட்டுள்ளார்.

மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், பாலியல் வழக்கை வெறும் மோசடி வழக்காக மட்டும் பதிவு செய்தது ஏன் என காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, வழக்கை மீண்டும் விசாரிக்க அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments