அரசியல், ஆன்மிகம் உள்ளிட்ட பொதுநிகழ்வுகளில் பங்கேற்க 100பேர் வரை அனுமதி - கர்நாடக அரசு

0 997
அரசியல், ஆன்மிகம் உள்ளிட்ட பொதுநிகழ்வுகளில் பங்கேற்க 100பேர் வரை அனுமதி - கர்நாடக அரசு

இன்று முதல் அரசியல், ஆன்மிகம் உள்ளிட்ட பொதுநிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணிந்து 100 பேருக்கு மேல் பங்கேற்கலாம் என்று கொரோனா கட்டுப்பாட்டு விதிகளில் கர்நாடக அரசு தளர்வினை அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் அதில் பங்கேற்பவர்கள், முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், சானிடைசர் கொண்டு கைகளை தூய்மைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 17ஆம் தேதி முதல் தொடங்கும் தசரா நிகழ்வுகளை எளிமையாகக் கொண்டாடவும், மைசூரில் நடக்கும் விழாவில் 200 பேரும், மற்ற பகுதிகளில் 100 பேர்வரை மட்டுமே பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளையும் இன்றுமுதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments