"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
அரசு அலுவலகங்களில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவையை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு
அரசு மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில் இனி பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவைக் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை விடுத்துள்ள அறிக்கையில், அனைத்து அமைச்சகங்கள், அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை அலகுகளுக்கு பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் தொலைத் தொடர்பு சேவைகளைப் பயன்படுத்த கட்டாயப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
இதில் இணையம், பிராட்பேண்ட் மற்றும் தரைவழிச் சேவை என அனைத்து சேவைகளும் அடங்கும் என்றும் தொலைத் தொடர்புத்துறையின் மெமோரண்டமில் கூறப்பட்டுள்ளது.
Comments