ஹத்ராசில் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு- உத்தரப்பிரதேச அரசு தகவல்

0 1263
ஹத்ராசில் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு- உத்தரப்பிரதேச அரசு தகவல்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.

விசாரணையை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடத்த அக்குடும்பத்தினருக்கும் சாட்சிகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் உயிரிழந்த பெண் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று ஆவணங்களை சேகரித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments