மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் ஆளுநர் முடிவு எடுக்க தாமதம் ஏன் ? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் ஏழரை சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்க தாமதம் ஆவது ஏன் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது 2 நாட்களில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ள நிலையில், ஆளுநர் முடிவெடுப்பதில் தாமதமாவது, சாதாரண மாணவர்களை பாதிக்காதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து அரசு தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கை நாளை வரை ஒத்திவைத்தும், இது தொடர்பாக ஆளுநரின் செயலரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கவும் உத்தரவிட்டனர்.
Comments