தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்

0 2100

தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கொரொனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்த பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 112 தனியார் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா தருமபுரியில் நடைபெற்றது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு, தனியார் பள்ளிகளுக்கான ஆணைகளை வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments