இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

0 1312
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு இதுவரை பலியானவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு இதுவரை பலியானவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூ ஷன், கொரோனா வைரசுக்கு இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் என்றார்.

இவர்களில் 70 சதவிகிதம் பேர் ஆண்கள் என்று அவர் குறிப்பிட்டார். பலியானவர்களில் 17 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 1 சதவீதம் பேர் என்றும், 45 முதல் 60 வயது வரையிலானவர்கள் 14 சதவிகிதம் பேர் என்றும் அவர் கூறினார்.

பிற நோய்கள் இல்லாதவர்களில் 1.5 சதவீதம் பேர் கொரோனாவால் பலியாகி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments