ரூமேனியாவில் உள்ள மிகப்பழமையான உப்பு சுரங்கத்தில் அண்டர்கிரவுண்ட் டைவிங் செய்து அசத்திய வீரர்கள்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த க்ளிஃப் டைவிங் சாம்பியன் ரியானன் இஃப்லாண்டு மற்றும் ரூமேனியாவின் வளர்ந்து வரும் நட்சத்திரம் கான்ஸ்டண்டின் போபோவிசி, இவ்விருவரும் உலகிலேயே மிகப் பழமையான உப்பு சுரங்கத்தில், 120 மீட்டர் ஆழத்தில் அண்டர்கிரவுண்ட் டைவிங் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
ரூமேனியாவில் உள்ள உலகின் மிகப்பழமையான உப்பு சுரங்கம் சலினா டூர்டா-வில், இந்த டைவிங் ஜோடி சுவரிலிருந்து , முக்கோண வடிவிலுள்ள சுரங்கப் பகுதிக்குள் குதித்து வெகு ஆழம் வரை பாய்ந்து சென்றனர்.
ஒரு மணி நேரத்திற்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் இவர்கள் பாய்ந்து சென்ற காட்சி ஒண்டர் லேண்ட் போன்ற அறிவியல் புனைக்கதைகளில் பார்ப்பது போன்று அதிசயமாக இருந்தது.
Comments