ஏவுகணை தொழில் நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது - பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு தலைவர்
இந்திய பாதுகாப்பு படைகளின் தேவைக்கு ஏற்ப எந்த ஏவுகணையையும் உள்நாட்டிலேயே தயாரிக்கும் வல்லமையை பெற்றுள்ளதாக பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் சதீஷ்ரெட்டி, ஏவுகணை தொழில் நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது என்றார்.
பாதுகாப்பு படைகள் விரும்பும் எந்த ஏவுகணையையும் உருவாக்கும் திறனை டி.ஆர்.டி.ஓ பெற்றுள்ளதாக கூறிய அவர், பல்வேறு ஏவுகணைகளை உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக கூறினார்.
ஒலியை மிஞ்சும் வேகத்தில் செல்லும் ஏவுகணை உதவியுடன் நீரடி வெடிகுண்டை செலுத்தும் கருவியால் இந்திய கடற்படையின் வலிமை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தொலைதூரத்திலேயே அழிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். நொடிக்கு 300 மீட்டர் வேகத்தில் பாயும் ஹைப்பர் சோனிக் ஏவுகணை அடுத்த 4 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்று சதீஷ்ரெட்டி கூறினார்.
Comments