வேளாண் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் பங்கேற்காததால் விவசாயிகள் கூட்டத்தைப் புறக்கணித்தனர்
வேளாண் சட்டங்கள் தொடர்பான விளக்க கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சர் பங்கேற்காததால் விவசாயிகள் பாதியிலேயே வெளியேறினர்.
அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு விவசாய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பாக டெல்லியில் மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பஞ்சாப்பை சேர்ந்த சுமார் 30 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மத்திய வேளாண்துறை செயலாளர் கலந்து கொண்ட நிலையில், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூட்டத்தில் பங்கேற்காததால், அதிருப்தி அடைந்த விவசாயிகள் பாதியிலேயே வெளியேறினர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், வேளாண் சட்ட நகல்களையும் எரித்தனர்.
Comments