இந்தியாவில் தடுப்பூசி தயாரானவுடன் யார் யாருக்கு முதலில் போட வேண்டும் ? ஹர்ஷ வர்தன் தலைமையில் அமைச்சர்கள் குழு ஆலோசனை
கொரோனா தடுப்பூசி இந்தியாவில் விநியோகத்திற்கு தயாரானவுடன் யார் யாருக்கு முதலில் போடப்படும் என்பது குறித்து சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தலைமையிலான அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தியது.
தடுப்பூசியை முன்னுரிமை அடிப்படையில் போட அறிவியல்பூர்வமான அணுகுமுறையை கையாள வேண்டும் என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களின் பட்டியலை இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத துவக்கத்திலோ தயார் நிலையில் வைத்திருக்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
இந்தியாவில் தடுப்பூசி தயாரானவுடன் யார் யாருக்கு முதலில் போட வேண்டும் ? ஹர்ஷ வர்தன் தலைமையில் அமைச்சர்கள் குழு ஆலோசனை #CoronaVaccine | #HarshVardhan
— Polimer News (@polimernews) October 14, 2020
https://t.co/bFAPvyDz5w
Comments