கடலூர் கெடிலம் ஆற்றங்கரையோரத்தில் துண்டிக்கப்பட்டு கிடந்த மனிதகால்: பொதுமக்கள் அதிர்ச்சி

0 1934
கடலூர் கெடிலம் ஆற்றங்கரையோரத்தில் துண்டிக்கப்பட்டு கிடந்த மனிதகால்: பொதுமக்கள் அதிர்ச்சி

கடலூரில் வள்ளி விலாஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்ட நோயாளியின் கால் கெடிலம் ஆற்றங்கரையோரத்தில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடலூர் கெடிலம் ஆற்றங்கரையோரத்தில் மனித கால் ஒன்று துண்டிக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், அங்கு கிடந்தது மேல்புவனகிரியை சேர்ந்த கணபதி என்பவரின் கால் என்பது தெரியவந்தது.

சர்க்கரை நோய்க்கு சிகிச்சை எடுக்க கடந்த மாதம் அவர், வள்ளி விலாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோய்த் தீவிரம் காரணமாக கணபதியின் வலது காலை துண்டிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் வள்ளி விலாஸ் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் அவரது கால் அகற்றப்பட்டுள்ளது. இந்த காலை முறையாக அப்புறப்படுத்தாமல், மருத்துவமனை ஊழியர்கள் சிலர், கெடிலம் ஆற்றின் கரையில் அலட்சியமாக வீசிச் சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து வள்ளி விலாஸ் மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு போலீசார் எச்சரித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக விரைந்து வந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த காலை எடுத்து வெறும் ஒரு அடிக்கு மட்டும் பள்ளம் தோண்டி புதைத்துச் சென்றனர்.

ஆற்றின் ஓரம் மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கே தடை உள்ளது. ஆனால் வள்ளி விலாஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர், மனித உடல் பாகத்தை அங்கு வீசிய நிலையில் பிரச்சனை ஆனதும் அதனை அங்கேயே பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர்.

இதனை ஏற்க மறுக்கும் அப்பகுதி மக்கள் அந்த காலை மீண்டும் தோண்டி எடுத்து முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் மனித உடல் பாகத்தை ஆற்றங்கரையோரம் வீசிய வள்ளி விலாஸ் மருத்துவமனை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments