தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக டி.ராஜேந்தர் பேட்டி
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தயாரிப்பாளர்களின் பிரச்சனைக்கு குரல் கொடுக்க யாரும் இல்லாத நிலையில், தாம் தொடர்ந்து தயாரிப்பாளர் நலனுக்காக குரல் கொடுத்து வருவதாகவும், 8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி தமிழக அரசுக்கு மனுக்கள் மூலம் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். வரும் 22ம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.
Comments