ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அம்பயரை மிரட்டினாரா தோனி?
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அம்பயர் பால் ரெய்ஃபெலை சிஎஸ்கே கேப்டன் தோனி மிரட்டினாரா என்ற கோணத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
11 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஐதராபாத் அணி ஆடிக் கொண்டிருந்தது. அப்போது சிஎஸ்கேவின் ஷர்துல் தாக்கூர், ஐதராபாத் வீரர் ரஷீத் கானுக்கு எதிராக வைட் பால் ஒன்றை வீசினார்.
அடுத்த பந்தும் வைட் பாலாக வீசப்பட்ட நிலையில், இரு கைகளையும் விரித்து வைட் சிக்னல் அளிக்க அம்பயர் தயாரானார். அப்போது, தோனி தனது கைகளை நீட்டி ஏதோ சொல்லவே, விரிக்கத் துவங்கிய கைகளை கீழே போட்டுவிட்டார் அம்பயர்.
அம்பயரை தோனி மிரட்டினார் என்று பலரும், கிரிக்கெட்டை விட தோனி பெரியவரா என்று சிலரும், சிஎஸ்கே அணியையே தடை செய்ய வேண்டும் என வேறு சிலரும் ஆத்திரத்தை கொட்டியுள்ளனர்.
Comments