சாமிக்கு பயந்து ரூ.5 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை தானே முன்வந்து ஒப்படைத்தவர் - பொள்ளாச்சியில் சம்பவம்

0 50242

பொள்ளாச்சியை அருகே கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தவர் தானாகவே முன்வந்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் நிலத்தை ஒப்படைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடியில் வரதராஜ பெருமாள் , மாரியம்மன் , விநாயகர் கோயில்கள் உள்ளன. இதில் , விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் சிஞ்சுவாடி, கோலார்பட்டி, தென் குமாரபாளையம் பகுதிகளில் உள்ளன. இதில், பல நிலங்கள் ஆக்கிரமிக்கவும் பட்டுள்ளன. இந்நிலையில் , சிஞ்சுவாடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 12.16 ஏக்கர் புஞ்சை நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த லட்சமாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தானே முன் வந்து நிலத்தை மீண்டும் கோயிலுக்கு ஒப்படைக்க முன் வந்தார். தொடர்ந்து, சிஞ்சுவாடி ஊராட்சி தலைவர் ஜெயக்குமார் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ராஜேஷ் கோயில் நிலத்தை ஒப்படைத்தார். இந்த நிலத்தின் மதிப்பு 5 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

சிஞ்சுவாடி விநாயகர் கோவிலுக்குச் சொந்தமான இந்த நிலம் 120 ஆண்டுகளாக தன் மூதாதையர்களிடத்தில் இருந்தாகவும் அந்த நிலத்தில் நான்கு தலைமுறையாக நாங்கள் விவசாயம் செய்து வந்தாகவும் ராஜேஷ் கூறியுள்ளார். இந்த நிலம் கோயிலுக்கு சொந்தமானது என்ற தகவல் மூல பத்திரத்தின் வழியாக தெரிய வந்தது என்றும் தனது ்தொழில் மற்றும் குடும்பத்திலும் பாதிப்புகள் ஏற்பட பிரசன்னம் பார்த்த போது கோயில் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டதாகவும் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தானே முன்வந்து கோயில் நிலத்தை ஒப்படைத்த ராஜேஷை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.ராஜேஷ் போன்று கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் அதை மீண்டும் நேர்மையாக ஒப்படைக்க முன்வர வேண்டுமென இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments