அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்... காலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்

0 4470
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்... காலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் மக்கள் நீண்டவரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

அமெரிக்காவில் இன்னும் 3 வாரத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. Houstonல் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்காளர்கள் கொரோனா வைரஸ் காரணமாக 6அடி தூர இடைவெளியை கடைபிடித்தபடி வாக்கினை செலுத்தினர்.

கொரோனா காரணமாக வாக்குச்சாவடிகளில் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு அதிபர் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களித்தல் மற்றும் முன்கூட்டியே வாக்களித்தல் முறை பின்பற்றப்படுகிறது. இதுவரை அங்கு ஒரு கோடி பேர் வாக்குகளை செலுத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையில் அதிபர் டிரம்ப் இந்த தேர்தலில் பல இடங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனை விட பின் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments