தைவானுக்கு அமெரிக்காவின் ஆயுத விற்பனை... சீனாவை ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் அமெரிக்கா
தைவான் நாட்டுக்கு அமெரிக்க ஆயுதங்கள் விற்பனைக்கு மூன்று ஒப்பந்தங்களைப் போட்டுள்ள நிலையில் அதற்கான முறையான அறிவிப்பு வெளியாகி சீனாவின் கோபத்தை அதிகரித்துள்ளது.
தைவான் சீனாவில் இருந்து விலகிய நாடு என்றும் அதனை மெயின்லேண்டுடன் ஆயுத பலத்தைக் கொண்டு மீண்டும் இணைக்க சீனா கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தைவான் சுயமாக செயல்பட ராக்கெட் லாஞ்சர், நீண்ட தூரம் வானில் இருந்து தரையை நோக்கித் தாக்கும் ஏவுகணைகள் எப்16 ஜெட் போர் விமானங்கள் போன்ற ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.
Comments