எல்லையில் அமைதிப்பேச்சு சர்ச்சையை கிளப்பும் சீனா

0 4146
எல்லையில் அமைதிப்பேச்சு சர்ச்சையை கிளப்பும் சீனா

லடாக் எல்லையில் சீனப் படைகளை விலக்க இந்தியா வலியுறுத்தியுள்ள நிலையில், எல்லைப்பகுதியில் இந்தியா மேற்கொண்டுள்ள கட்டுமான பணிகளே, பதற்றத்திற்கு காரணம் என, சீனா குற்றம்சாட்டியுள்ளது.

கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்னை சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதனிடையே, எல்லையில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் கடந்த 12ம் தேதி, இருநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான 7வது சுற்று பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. அதில், இருநாடுகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டுள்ள, அனைத்து எல்லைப் பகுதிகளில் இருந்தும் சீனப் படைகள் பின்வாங்க வேண்டும் என இந்திய வலியுறுத்தியது.

அதைதொடர்ந்து, எல்லையில் படைகள் விலக்கலை விரைவில் அமல்படுத்த தீர்வு காணப்படும் என, இந்திய மற்றும் சீன ராணுவம் தரப்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. மேலும், ராணுவம் மற்றும் ராஜாங்க ரீதியில் தொடர்ந்து பேச்சுவார்த்தையை நடத்தவும், சர்ச்சை ஏற்படாமல் எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பேணவும், இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், பெய்ஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சுவோ லிஜியான், லடாக் யூனியன் பிரதேசத்தை சட்டவிரோதமாக இந்தியா உருவாக்கியுள்ளதாக கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

லடாக் மற்றும் அருணாச்சலில் இந்தியா கட்டுமானப் பணிகளை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அங்கு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டால் இருதரப்புக்கும் இடையே பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

லடாக் மற்றும் அருணாச்சல் எல்லையில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த 44 பாலங்களை, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments