ஹாத்ரஸ் வழக்கில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் சிபிஐ பல மணி நேரம் விசாரணை
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருடன் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் சகோதரனையும் தங்களுடன் அழைத்துச் சென்றதாக அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட நால்வரும் தாங்கள் அந்தப் பெண்ணைக் கொலை செய்யவில்லை என்றும் குடும்பத்தினரே ஆணவக் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.
Comments